உரத்தின் விலை அதிகரிப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த வருடம் சிறுபோகம் தொடங்கியிருந்தும் கூட அரசாங்கம் உரத்தின் விலையை உயர்த்தி உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் நெல் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உர மானிய தொகை முறையாக வங்கியில் வைப்பில் இடப்படவில்லை என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இவ்வாறான நிலையில், சிறுபோக பயிர்ச்செய்கைக்கான உரம் போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால், உரத்தின் விலை அதிகரிப்பை அனுமதிக்க முடியாது என்று கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture of Sri Lanka) அறிவித்துள்ளது.
உர வகைகளின் விலை
உலக சந்தையில் தற்போதைக்கு உர வகைகளின் விலை அதிகரித்துள்ளது. ஆயினும் இலங்கையில் சிறுபோக பயிர்ச் செய்கைக்கான உர வகைகள் முன்னதாகவே இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
யூரியா மட்டுமன்றி பொஸ்பேட் வகை உர வகைகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
எனவே உர வகைகளுக்கான விலை அதிகரிப்பு இப்போதைய சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது அது சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அவ்வாறு பரவும் தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. அதனை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கமத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
