காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு
காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் நீர்கொழும்பு பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் 13 வயது மாணவன் ஆவார்.
இரு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காய்ச்சல் கூடுவதும் குறைவதுமாக காணப்பட்டதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மேலும் அவர், தனது மகன் நேற்று சனிக்கிழமை (05) இரவு தூக்கத்துக்கு சென்றுள்ளதாகவும், பின்னர் மகன் அசைவற்ற நிலையில் காணப்பட்டதால் அன்றிரவு 10.30 மணியளவில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்ததோடு, தனது மகன் மூச்செடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார் என்றும் வைத்தியர்கள் மகனை காப்பாற்ற கடுமையாக போராடினர்.ஆனாலும், மகன் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
மேற்படி, உயிரிழந்த சிறுவனின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.