கண்டியில் இந்தியாவால் அமைக்கப்பட்ட கள மருத்துவமனை!
டிட்வா சூராவளியின் தாக்கத்தால் வெள்ள நிலைகளில் பாதிப்படைந்த இலங்கை மக்களுக்கு அவசர சுகாதார தேவைகளை ஆதரிப்பதற்காக இந்தியா விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இதன்படி கண்டியில் உள்ள மஹியங்கனையில், இந்திய மருத்துவக் குழுவினால் ஒரு முழுமையான கள மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது.
இந்த கள மருத்துவமனைப் பிரிவு, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சிகிச்சை, சத்திரசிகிச்சை சேவைகள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.
மருத்துவ உதவி
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மஹியங்கனை மக்களுக்கு, அவசர மருத்துவ உதவிகளை நேரடியாக வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |