உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு வழங்கவுள்ள பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..!
கர்த்தார் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று லுசைல் மைதானத்தில் விறுவிறுப்புடன் இடம்பெறவுள்ளது.
ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியை 80,000 பார்வையாளர்கள் கண்டுகழிக்கும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரின் ஆரம்பம் முதல் இதுவரை 2.89 மில்லியன் அனுமதிச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பியனாகும் அணி
இதனிடையே, இன்று இரவு கால்பந்து உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனாகும் அணிக்கு, 42 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைக்கும்.
அதேவேளை, இரண்டாம் இடம் பெறும் அணிக்கான பரிசுத் தொகை 30 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும்.
நேற்றைய போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்த குரேஷியாவுக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.