அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவிட்டால் மீண்டும் போராட்டம்: ஆசிரிய சங்கம் தகவல்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படும் அவலநிலையை கண்டித்தும் நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரியும் நாடளாவிய ரீதியில் இன்று சுகயீன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்திருந்தது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த வாரம் அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 28ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து அரச, தனியார், விவசாயம், தொழிலாளர் துறைகள் உள்ளிட்ட அனைவரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி