ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி

Jaffna Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Rajapaksa Family
By Jaso Mar 05, 2024 04:38 PM GMT
Report

நடைபெறவுள்ள தேர்தல் ராஜபக்சாக்களின் இறுதித் தேர்தல் ஆக இருக்கலாம் இது ரணில் விக்ரமசிங்கவுக்கு இறுதி தேர்தல் மட்டுமல்ல சாவு மணியும் கூட. இவர்கள் மக்கள் மத்தியில் சென்று எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 துரத்தி அடிக்கப்பட்ட ஒருவரே பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்சவின் வருகை மிகவும் வரவேற்கத்தக்க கூடிய ஒரு விடயமாகும், ஏனென்றால் நாட்டில் பசில் ராஜபக்ச என்பவர் கடந்த காலங்களில் எமது நாட்டில் அமைச்சராக இருந்தவர், நிதி அமைச்சராக இருந்தவர், அது மாத்திரமல்ல 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டத்தின் பின் ஓடுவதற்கு நாடு இல்லாமல் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவரே பசில் ராஜபக்ச ,நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராஜபக்ச தான் .

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி | Final Election For The Rajapaksas And Ranil

அவரை வரவேற்பதற்காக இன்று அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். விமானங்கள் இல்லாத அங்குமிங்கும் ஓடித் திரிந்த இந்த நபர் தான் அவர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து , நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

ரணிலின் அதிரடி உத்தரவு - முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு

ரணிலின் அதிரடி உத்தரவு - முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் 

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள்.இதை நான் கூறவில்லை இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் வேறு யாரும் இல்லை இந்த ராஜபக்ச குடும்பமே. பசில், மகிந்த, கோட்டபாய ராஜபக்ச, போன்றவர்கள் என நீதிமன்றம் கூறியது.

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி | Final Election For The Rajapaksas And Ranil

பொருளாதார கொலையாளிகள் வேறு யாரும் இல்லை இந்த குடும்பமே. இவர் கடந்த காலங்களில் விளையாடிய விளையாட்டை எனியும் விளையாட முடியாது. இது பசில் ராஜபக்ச அவர்களின் கடைசித் தேர்தல் ஆக இருக்கலாம். எமது நாட்டை நாசமாக்கியவர்கள் எமது நாட்டை கடன் பொறிக்குள் தள்ளியவர்கள், நாட்டில் இனவாதத்தை தூண்டியவர்கள்.

மொட்டுக்கட்சிக்குள் பிளவு! ரணிலை சந்திக்க அவசர அவசரமாக நாடு திரும்பினார் பசில்

மொட்டுக்கட்சிக்குள் பிளவு! ரணிலை சந்திக்க அவசர அவசரமாக நாடு திரும்பினார் பசில்

இனவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள்

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது எல்லா விதமான இனவாதத்தையும் தூண்டி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இனவாதம், பல்வேறு வகையான சித்து விளையாட்டுகளை விளையாடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள்.

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி | Final Election For The Rajapaksas And Ranil

இவர்களுக்கு மக்கள் இனிவரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள். இவர்கள் அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை தேசிய மக்கள் சக்தி செய்யும் - என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026