மின் கட்டண திருத்தம்: இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) அனுப்பிவைத்துள்ளது.
இதேவேளை அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன் பின்னர் ஆணைக்குழு இறுதி முடிவை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக 2 ரூபாவினால் குறைக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
மின்கட்டண குறைப்பு
அத்துடன் 31-60 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக 11 ரூபாவினாலும் குறைக்க முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 61-90 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்தக் கட்டணத்தை 18 ரூபாவாக அறவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
91-120 அலகுகளுக்கு இடையில் மாதாந்தக் கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 20 ரூபாவாலும் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |