பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் குறித்து வெளியான அறிவித்தல்
மறைந்த பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார்.
இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருமவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பதவிகளை வகித்தவர்
1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒருவராவார்.
2002 ஆம் ஆண்டு மத்துகம பிரதேச சபையின் தலைவராக இருந்த பாலித தெவரப்பெரும பின்னர் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும், வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |