உக்ரைனில் ரஷ்ய வீரருக்கு நேர்ந்த இறுதி நேர துயரம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளிவந்தது
உக்ரைன் இராணுவத்தின் அதிரடி தாக்குதலில் தப்பிக்க முயன்ற ரஷ்ய டாங்கி படைப்பிரிவின் வீரரொருவர் உயிரிழக்கும் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை அவுஸ்திரேலியாவிற்கான உக்ரைன் தூதுவர் ஒலெக்சாண்டர் ஷெர்பா வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பாளரின் இறுதி நிமிடங்கள் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவந்த ரஷ்ய இராணுவத்தின் டாங்கிகளை குறிவைத்து உக்ரைன் ஆயுதப்படை ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைன் ராணுவம் நடத்திய இத்தகையதொரு தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தின் டாங்கி படைப்பிரிவின் வீரர் ஒருவர் இறுதி தருணத்தில் தப்பிக்க முயற்சித்து உயிரிழந்தது தொடர்பான வீடியோவே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Last seconds of this #Russian invader in #Ukraine.#StandWithUkraine️ #UkraineUnderAttack #RussiaInvadedUkraine #RussianArmy #PutinIsaWarCriminal #StopPutin #RussianUkrainianWar #RussiaGoHome #нетвойне #россиясмотри #PutinsSponsors #Russia #Putin pic.twitter.com/2JCUAS3pDs
— olexander scherba?? (@olex_scherba) March 19, 2022
