நாட்டை விட்டு வெளியேறிய ரணில் - இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கு புதிய பதவி
Ranil Wickremesinghe
Shehan Semasinghe
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணிலின் உத்தரவு
ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதில் பாதுகாப்பு அமைச்சரின் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
