மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

Sri Lanka Ministry of Finance Sri Lanka India
By pavan Nov 08, 2023 04:28 AM GMT
Report

மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

”நாம் 200 நிகழ்வில் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார்.

தொப்புள் கொடி உறவு 

அவர் கொழும்புக்கு வருகை தந்தார்,  கிழக்கு மற்றும் வடக்குக்கு சென்றார். ஆனால் மலையகத்துக்கு செல்லவில்லை. ஆனால் மலையக மக்களை கௌரவிக்கும் நாம் 200 ஆண்டு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

மலையக மக்களுக்கும், இந்திய தேசத்தின் தமிழகத்துக்கும் இடையில் தொப்புள் கொடி உறவு காணப்படுகிறது.

மலையக 200 நிகழ்வு தொடர்பில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தி நாம் 200 நிகழ்வில் ஒளிப்பரப்பப்படவில்லை. ஆகவே மலையக மக்களை கௌரவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் நாடகம் மற்றும் அரசியல் கூத்தை அரங்கேற்றியுள்ளது.

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி | Finance Minister Nirmala Sitharaman Participated

2017 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை இந்திய நிதியமைச்சர் மீண்டும் நினைவுப்படுத்திச் சென்றுள்ளார். மறுபுறம் 2000 ஆம் ஆண்டு முதல் பேசப்படும் 10 பேச்சர்ஸ் காணியை ரணில் விக்ரமசிங்க மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார்.

இந்த நாடாளுமன்றத்தை மூன்று தொண்டமான்கள் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்கள். இவர்களால் கடந்த 40 வருடகாலம் செய்ய முடியாததை நான் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் செய்து முடித்துள்ளேன்.

தொண்டமான் பரம்பரை

கண்டி மாவட்டத்தில் மலையக தோட்ட அபிவிருத்திக்கு சொந்தமான லிட்டில்வெளி தோட்டத்தில் உள்ள சகல லயன் அறைகளையும் ஒதுக்கி 110 குடும்பங்களுக்கு 10 பேச்சரஸ் காணியை ஒதுக்கி அதற்கான உறுதிபத்திரத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி | Finance Minister Nirmala Sitharaman Participated

தொண்டமான் பரம்பரையில் உள்ளவர்களில் எவருக்காவது இதனை சாதிக்க முடியுமா, தோட்ட லயன் அறைகளை ஒதுக்கி காணி உறுதிப்பத்திரத்துடன் காணிகளை வழங்க முடியுமா என்று தொண்டமான்களுக்கு சவால் விடுக்கிறேன்.

தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக நாம் 200 என்ற நிகழ்வை நடத்தி மலையக மக்களை தரகுறைவாக நடத்தியதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012