வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெரும் மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பாக பணியகத்திற்கு வரும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும் பணியகத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிறுவனங்களில் சட்டப்பூர்வம தன்மை
எனவே, அத்தகைய வேலைகளை வழங்கும் நிறுவனம் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமத்துடன் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், வேலை வாய்ப்பு பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், எந்தவொரு கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு அல்லது பயண ஆவணங்களை ஒப்படைப்பதற்கு முன்பு சரிபார்க்குமாறு வேலை தேடுபவர்களை SLBFE கேட்டுக்கொள்கிறது.

மேலும், மோசடி நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் பற்றிய தகவல்கள் யாரிடமாவது இருந்தால், 0112882228 அல்லது 1989 என்ற ஹாட்லைன் மூலம் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் காவல் பிரிவுக்கு முறைப்பாடளிக்குமாறு SLBFE கேட்டுக்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்