நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்த எம்.பி
பின்லாந்து (Finland) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (Eemeli Peltonen|) (30) உடலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
அலுவலகங்களையும் மூட உத்தரவு
இந்நிலையில், அவர் எங்கள் சமூகத்தின் மிகவும் நேசிக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார், நாங்கள் அவரை மிகவும் இழப்போம்.
ஒரு இளம் வாழ்க்கை மிக விரைவாக முடிந்துவிட்டது என்று சமூக ஜனநாயக நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டைட்டி துப்புரைனென் தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
