கடைத்தொகுதியில் பாரிய தீ பரவல் - முற்றுமுழுதாக எரிந்து நாசமான கடைகள்

Mullaitivu
By Thulsi Jun 16, 2025 09:17 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) பாரிய தீவிபத்து ஏற்பட்டது.

பலத்த போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த தீ பரவலானது முதலில் MVM உணவகத்தில் ஆரம்பித்து அருகில் உள்ள ANSAF பாதணிக் கடைக்கு பரவி பாரிய தீ விபத்தாக மாறியது.

முற்றுமுழுதாக எரிந்து நாசம்

இதில் குறித்த உணவகம் மற்றும் பாதணிக் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிவடைந்துள்ளதோடு அருகில் உள்ள மேலும் இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கடைத்தொகுதியில் பாரிய தீ பரவல் - முற்றுமுழுதாக எரிந்து நாசமான கடைகள் | Fire Accident Report In Mullaitivu Today

இந்த தீபரவல் ஏற்பட்டதும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, கடற்படையினர் , இராணுவத்தினர் விரைந்து நீர்த்தாங்கிகள் மூலம் தீ பரவலை காலை 9.30 மணியளவில் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப்பிரிவு இல்லாமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியிருந்தது.

இருப்பினும் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனால் கிளிநொச்சி மாவட்ட தீயணைப்புப் படைப்பிரிவின் உதவி கோரிக்கை இடைநிறுத்தப்பட்டது.

தீயணைப்புப் பிரிவு இல்லாமை

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

கடைத்தொகுதியில் பாரிய தீ பரவல் - முற்றுமுழுதாக எரிந்து நாசமான கடைகள் | Fire Accident Report In Mullaitivu Today

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப் பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவதுதொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024