தொழில்நுட்பக்கல்லூரியில் திடீர் தீ - உபகரணங்கள் எரிந்து நாசம்(படங்கள்)
Sri Lanka Institute of Information Technology
Fire
By Jaso
தொழிநுட்பக் கல்லூரியில் பற்றிய தீ
காலி களுவெல்ல தொழிநுட்பக் கல்லூரியின் கட்டடம் ஒன்றில் இன்று (3) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் மற்றும் பல உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
மெகாட்ரோனிக்ஸ் ஆய்வகத்தில் (ரொபோடிக்ஸ்) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயினால் மாணவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு
காலி மாநகரசபையின் தீயணைப்பு திணைக்களத்தின் இரண்டு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளதுடன், கூரையில் பொருத்தப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தீயணைப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி