யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து விவகாரம் : அரச தரப்பின் அதிரடி அறிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் அரச தரப்பு விளக்கமளித்துள்ளது.
குறித்த தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையிலான முன்னேற்றம் விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நேற்று (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய விசாரணை நடத்த பணிப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து அபாயகரமானதாகும்.

குறிப்பாக மருந்துகள் தொடர்பான விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றபோது இந்த சம்பவம் பதிவானமை, மிகவும் அபாயம் மற்றும் சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறும் அப்போதே பணிக்கப்பட்டது. விரைவில் அந்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 16 மணி நேரம் முன்