கண்டி தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!
Srilanka
Kandy
Fire
tea factory
By MKkamshan
கண்டி - பன்விலை ராக்ஷாவ தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது தொழிற்சாலையில் ஒரு பகுதியில் இத் தீ ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும், இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.
இத் தீ ஏற்படுவதற்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்