மட்டக்களப்பு தொடருந்து நிலைய விடுதி பகுதியில் தீவிபத்து
Batticaloa
Sri Lanka
Eastern Province
By Dharu
மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தின் விடுதி பகுதியில் தீவிபத்தொன்று சம்பவித்துள்ளது.
எனினும், தீயானது நாகரசபை தீயணைப்பு படடையினர் குருக்கள்மடம் இராணுவத்தினர் உள்ளிட்டோரால் கட்டுபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பனை மரங்கள்
இதனால் அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் அந்த பகுதியிலுள்ள புல் தரைகளில் பற்றி தீ பரவத் தொடங்கியதுடன், பனை மரங்கள் மற்றும் மரங்கள் பற்றியதுடன், தொடருந்து எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் தொடருந்து எரிபொருள் தாங்கி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி