எரிபொருள் கொள்முதல் குறித்து வெளியாகிய அறிவிப்பு
எரிபொருள் கொள்முதலுக்கு மின்னணு செயல்முறை அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் மட்டுமே எரிபொருள் வழங்க அனுமதிக்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிப்படையான கொள்முதல்
இருப்பினும், புதிய நிர்வாகத்தின் கீழ் மிகவும் வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளுடன், 5 முதல் 10 நிறுவனங்கள் எண்ணெய் வழங்க முன்வந்துள்ளதாக மயூரா நெத்திகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், தற்போது எரிபொருள் கொள்முதல் சில சந்தைகளுக்கு மட்டுமே என்றும், எதிர்காலத்தில் ஆப்பிரிக்க மற்றும் பிற சந்தைகளில் இருந்து எரிபொருளை வாங்கும் திட்டங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |