ஈரானுக்கெதிராக இலங்கையை மையப்படுத்திய அமெரிக்காவின் இரகசிய திட்டம்
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்துள்ள நிலையில் தவிர்க்க முடியாத வகையில் இலங்கை இந்தப் போருக்குள் இழுக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் இந்தப் போரின் அடுத்த நிலைக்குள் செல்லும் போது பெருமளவு விழைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் எனவும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரே உத்தி இந்த நாடுகள் அனைத்தையும் சமதூரத்தில் வைத்து உறவு கொள்வதே என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுக்கு முன்னே ஒரு சக்தியாக நிற்கக்கூடிய திறன் ஈரானிடம் இல்லை. ஆனால் ஈரான் இப்போதிருக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பத்தின் தேர்ச்சியை வைத்துக்கொண்டு தான் இந்தப் போரை எதிர்கொள்கின்றது. மிக மோசமான விடயங்களை முன்னிறுத்திக்கொண்டு இஸ்ரேலையும் அமெரிக்காவையும் தோற்கடித்தது என கூறியுள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |