ஈரானின் கார்க் கிரீடத்தில் பங்கர் - பேஸ்டர் வெடிக்க கொழும்பில் அநுர கிரீடமும் அதிரும்!
ஆடிக்காற்றில் அம்மியே பறக்க இலவம் பஞ்சோ ஐயோ எனக்கு என்ன கதி என அலறியதாம்! என்பது போல மத்திய கிழக்கின் சமகால நெருக்கடியால் சிறிலங்காவும் ஐயோ எனக்கு என்ன கதி என அங்கலாய்க்கிறது.
சிஸ்ரம் சேஞ் அநுர அரசாங்கம் என்னதான் ரஸ்யா இந்தியா சீனா என எல்லோரிடமும் ஓடியோடி எண்ணெய்க்காக வெண்ணெய் அதாவது பட்டர் வைத்தாலும் மத்திய கிழக்கின் பாதக சிஸ்ரம் இப்போதைக்கு மாறாது இன்னும் இறுகும் என்பதை அது அறியக்கூடும்.
ஈரானின் கேந்திர கிரீட இடமாக கருதப்படும் கார்க்தீவில் அமெரிக்கா பங்கர் பேஸ்டர் குண்டுகளுடன் கைவைத்த புதிய நிலையானது உலக சந்தையில் எண்ணெய் விலையின் கட்டுப்பாட்டை தாறுமாறாக்கும் என்ற அபாய செய்தி வந்தது.
இந்தநிலையில் மத்தியகிழக்கு விமான பயணவழியின் முடங்கத்தால் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுடன் தரையிறங்க வேண்டிய விமானங்களின் 768 சேவைகள் மீளெடுக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் தொகையில் 30 சதவீத வீழ்ச்சி வந்தது என்ற செய்திகளும் அதேபோல ஈரானுக்குரிய தேயிலை ஏற்றுமதியும் நின்றுவிட்டதால் களஞ்சியங்களில் தேயிலை பொதிகள் தேங்கி கிடக்கும் செய்திகளும் வருகின்றன.
இவ்வாறான உள்ளூர் நெருக்கடிகளின் பின்னணியில் மத்திய கிழக்கு போரின் இன்றைய 14 வது நாள் நாசகார ஆட்டம் ஹோர்மூஸ் நீரிணையை மையப்படுத்திய நாசகாரமான ஒரு துருப்புச்சீட்டு அடி ஆட்டமாக மாறிவிட்டது.
ஈரானில் ஒரு ஆட்சிமாற்றத்துக்கும் அதன் அணுதிட்டத்தை முறியடிப்பதற்கு எதிரானதாக அடையாளப்படுத்தபட்ட இந்த போர் இப்போது அந்த நாட்டின் பொருளாதார உயிர்நாடியை பணயம் வைக்கும் கார்க்தீவு ஆட்டமாக மாறிவிட்ட நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |