பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் திகதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆண்டு ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறும் என்றும் உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2026 சாதாரண தரப் பரீட்சை
இதேவேளை, 2027 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |