அநுரவின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 160 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தததையடுத்து இன்று (14.11.2025) வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அதன்படி, குறித்த வாக்கெடுப்பில் 160 வாக்குகளுடன் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், குறித்த வாக்கெடுப்பில் 42 எதிராக வாக்களித்துள்ளனர்.
8 பேர் வாக்கெடுப்பிலிருந்து விலகியுள்ளனர்.
மேலதிக வாக்குகள்
அதன்படி, வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

எவ்வாறாயினும், தமிழர் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ச மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |