400 ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரஷ்யா சென்ற விமானத்தில் நடுவானில் பற்றியது தீ
Flight
Russia
Moscow
By Sumithiran
பாங்கொக்கிலிருந்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்குப் பயணித்த ஏரோ ப்ளோட் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் இன்று (06) இந்திய வான்வெளி வழியாக மொஸ்கோ சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் அந்த விமானத்தின் உள்ளே திடீரென தீப்பற்றியது.
உடனடியாக செயற்பட்ட விமானி
இதனை அறிந்த விமானி உடனடியாக, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததுடன் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார்.
டில்லி விமான நிலையத்தில் தரையிறக்கம்
இதனைத் தொடர்ந்து, டில்லி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த 425 பயணிகளும், விமான பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானத்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்