வெளிநாடொன்றில் பாரிய தீ விபத்து...! எரிந்து நாசமான நூற்றுக்கணக்கான வீடுகள்
தென்மேற்கு ஜப்பானில் (Japan) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 170 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து சம்பவம் நேற்று ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரத்திலுள்ள துறைமுகத்தில் ஏற்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புக் குழு
மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் குறைந்தது 170 வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது எரிந்துள்ளன என்று பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம்
தீ "கண் இமைக்கும் நேரத்தில் பரவியதால்" தனது பல உடைமைகளை எடுத்துக்கொண்டு விரைவாக ஓடி விட்டதாக ஒரு குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்

தீ முற்றிலுமாக அணைக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று நகர மேயர் ஷின்யா அடாச்சி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்தள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் அது எவ்வாறு பரவியது என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக FDMA தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |