பொரளையில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து : சிலர் வைத்தியசாலையில்
Colombo
Sri Lanka
Fire
By Sindu
பொரளை, வோட் ப்ளேஸில் நேற்று (23) மாலை ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வர நான்கு தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தீப் பரவலின்போது ஹோட்டலுக்குள் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் இருந்ததோடு, அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் வைத்தியசாலையில்
தீயினால் வெளியான புகையை சுவாசித்ததில் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பிடித்தமைக்கான காரணம் மற்றும் பொருட் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி