பிரான்ஸில் திடீர் தீ விபத்து: கருகி உயிரிழந்த மூவர்
France
By Laksi
பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று(8) இடம்பெற்றுள்ளது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கசிவு
இதனையடு்த்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முற்று முழுதாக அணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி