ஐ.நா. உச்சிமாநாட்டு அரங்கில் தீ.! ஓட்டம் பிடித்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்
ஐ.நா. காலநிலை உச்சிமாநாடு இடம்பெற்ற பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 அரங்கிற்குள் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தற்போது தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய குழுவினர்
இதேவேளை, குறித்த இடத்தில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட இந்தியக் குழுவில் சுமார் 20 பேர் தீ விபத்து நடந்த இடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#COP30 is on fire pic.twitter.com/VWAIhjVrqm
— Mike Szabo / @szabotage.bsky.social (@MikeSzaboCP) November 20, 2025
அத்தோடு, அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், மின்சார கசிவினால் இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |