யாழ் - கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் தீ பரவல்
யாழ். காரைநகர் கசூரினா கடற்கரையை (Casuarina Beach) அண்மித்த பகுதிகளில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு (20) 9 மணி அளவில் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.
இதனை அறிந்த பிரதேச மக்கள் காவல்துறையினருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சி
அதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், கடற்படையினர் மற்றும் பிரதேச சபையினர் இணைந்து பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பெருமளவான மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




