கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு
Kilinochchi
By Vanan
கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கார் சாரதி காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்