தேங்காய் பறித்தவர் மீது துப்பாக்கிச் சூடு: தென்னிலங்கையில் சம்பவம்
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
சமையலுக்காய் தேங்காய் ஒன்றை அனுமதியின்றி பறிப்பதற்காக சென்றவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி பிற்பகல் 2.15 மணியளவில் சமைப்பதற்கு தேவையான தேங்காயை பறிப்பதற்காக அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்து தேங்காய் பறிக்கும் போது தோட்ட உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
23ம் திகதி வரை விளக்கமறியல்
அவரின் காலின் தொடைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
நீர்கொழும்பு தழுப்பொத்த,அடி ஹெட்ட வீதியை சேர்ந்த 25 வயதான ரோஷான் புஸ்பகுமார என்பவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிசூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தோட்ட உரிமையாளரை 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

