2024 ஜனவரியில் 5000 கோடி உணவுகளை உண்ட இலங்கை மக்கள்
Central Bank of Sri Lanka
University of Peradeniya
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ரூபா 5000 கோடி மதிப்பிலான உணவுகளை நாடு உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி இந்த வருடத்தின் முதல் மாதத்தில் நுகர்வுப் பொருட்களின் இறக்குமதிக்காக மாத்திரம் ஒன்பதாயிரத்து முப்பத்தாறு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நுகர்வுப் பொருட்களின் இறக்குமதி
நுகர்வுப் பொருட்களின் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பதினான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் குளிர்பானங்களை இறக்குமதி செய்வதற்கு 5028 கோடி ரூபாவும் ஏனைய பொருட்களுக்கு 4007 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி