விவசாயத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! விதைகளை உலரவைக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
சூரிய சக்தியை பயன்படுத்தி தானியங்களை உலரவைக்கும் தொழில்நுட்ப இயந்திரம் (solar tunnel dryer) இலங்கையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, மக்காச்சோளம், நெல், பச்சைப்பயறு, மாட்டுப்பயிறு, எள், விரலி மற்றும் உளுந்து உள்ளிட்ட தானிய விதைகளை இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா நெளுக்குளத்தில் இந்த புதிய சூரிய சக்தி அமைப்பு அண்மையில் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய விதை உலர்த்தும் முறை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இயற்கையான சூரிய ஒளி
இந்த இயந்திரத்தின் சுரங்க அமைப்பு முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்டிருப்பதால் இயற்கையான சூரிய ஒளியும் சூரியக் கதிர்வீச்சும் இந்த இயந்திரத்திற்கு தொடர்ந்து கிடைக்கும் என கூறப்படுகிறது.
தவிரவும் இரவில் கூட, விதைகளை உலர்த்தக் கூடிய வகையில் அதற்கு தேவையான உகந்த வெப்பநிலை சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் செலவில்லாமல் பெறப்படுகிறது என்றும் இந்த முறையின் கீழ், விதைகள் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
பரிசோதனைகள் அனைத்தும்
இந்நிகழ்வில் உரையாற்றிய விவசாயத் துறை நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன், இலங்கைக்கு முதன்முறையாக சோலார் டன்னல் உலர்த்தி (solar tunnel dryer) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதாகவும்,
இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகள் அனைத்தும் 100 வீதம் வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |