சிங்கப்பூரில் ஒமிக்ரோனுக்கு முதல் பலி
singapore
first death
omicron
By Sumithiran
சிங்கப்பூரில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவா் உயிரிழந்துள்தாக சனல் நியூஸ் ஏசியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 92 வயதான மூதாட்டியே உயிரிழந்தவராவார். இதுவரை கொரோனா தடுப்பூசி எதுவும் செலுத்தியிராத அவருக்கு, ஏற்கனவே பல்வேறு மருத்துவ உபாதைகள் இருந்து வந்தன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாள்களுக்குப் பின்னர் கடந்த வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
அவரது இறப்பு குறித்து ஆய்வு செய்த மருத்துவா்கள், ஒமிக்ரோன் வகை கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால்தான் மரணம் ஏற்பட்டதாக தற்போது அறிவித்துள்ளனா் என்று சனல் நியூஸ் ஏசியா மேலும் தெரிவித்துள்ளது.
