மீன் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kiruththikan
03 வயது குழந்தை
பன்வில, மடுகலே பகுதியில் மீன் தொட்டியில் விழுந்து 03 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
சிறுவன் தனது வீட்டின் முன்பகுதியில் இருந்த மீன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் 2½ அடி தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை

சம்பவத்தின் போது குழந்தையின் நான்கு உடன்பிறப்புகளும் பாடசாலைக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையும் தாயும் வீட்டில் இருந்த நிலையில், வீட்டின் முன் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீன் தொட்டியில் விழுந்துள்ளது.
சிசுவின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 21 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி