முல்லைத்தீவில் கடற்தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர வண்டி ஊர்தி பவனி(படங்கள்)
சர்வதேச கடற்தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு துவிச்சக்கரவண்டி கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்றிருந்தது.
குறித்த ஊர்வலம் இன்று (21.11.2023) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
“ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில் நிலையான மீன் வளங்களை உறுதி செய்தல்” எனும் தொனிப்பொருளில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
துவிச்சக்கரவண்டி கவனயீர்ப்பு ஊர்வலம்
துவிச்சக்கரவண்டி கவனயீர்ப்பு ஊர்வலமானது சிலாவத்தை சந்தியில் இருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வந்தடைந்து நிறைவு பெற்றது.
கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் அதனை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்வலங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமுக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செளியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கடற்தொழிலாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











