இலங்கை - இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை : பிரதமர்

Dinesh Gunawardena Sri Lanka India
By Beulah Oct 08, 2023 03:18 PM GMT
Report

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையானது நீண்டகாலமாவே இருந்து வருகின்றது.

இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு பிரதமர் நேற்றைய தினம்(07) வழங்கிய பிரத்தியோனமான நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

பிரதமருடனான நேர்காணல்

இவ்விடயம் தொடர்பில் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை : பிரதமர் | Fisherman Issues India Srilanka Permits Dinesh

கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக்கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாதா? இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில்- நீங்கள் கூறியது போன்று இருதரப்பிலும் தமிழ் பேசும் மீனவர்களே உள்ளனர். பிரச்சினை என்னவென்றால் மீன்களுக்கு எல்லையொன்று இல்லை. மீன்கள் எல்லாப் பக்கங்களும் செல்லக்கூடியன. மீனவர்கள் மீன்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்கிறார்கள். பாக்குநீரினை ஒரு சிறிய பகுதியாகும். இதுப்பற்றி விரிந்த பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றோம். தற்போது உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. கைதான இந்திய மீனவர்கள் சிலர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பிடிக்கப்படும் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. வட பகுதியில் சிறந்த மீன்பிடி வளம் உள்ள பகுதியாகும்.

கேள்வி- இந்திய மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கி மீன் பிடிக்கக் கூடிய இந்தியாவின் முன்மொழிவுகள் பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் - ஆம். அதைப்பற்றி பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டெல்லிக்கு விஜயம் செய்திருந்த போதும் பேசப்பட்டது.

கேள்வி- இந்த திட்டத்தை பரீசிலிக்க தயாராக இருக்கிறீர்களா?

பதில்- ஆம். பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம். இருப்பினும் இந்த இரண்டு தரப்பு மீனவர்களின் ஒத்துழைப்புகளும் அவசியமாக உள்ளது. ஏனென்றால் இது அரசு தரப்பு சார்ந்த விடயம் மட்டுமல்ல. பிரதானமாக மீனவர்கள் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்பு புரிந்துணர்வு கட்டாயம் இருக்க வேண்டும் என்றார்.  

பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டம் : நீங்களும் அமெரிக்கா செல்லலாம்

பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டம் : நீங்களும் அமெரிக்கா செல்லலாம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026