யாழில் அர்ச்சுனா எம்.பிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தார்.
பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு
குறித்த முறைப்பாடு வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராஜா தனகோபி, சிவரூபன் லகீந்தன் மற்றும் மனோகரன் பிரதீபன் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டினை அடுத்து கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் தெல்லிப்பளை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்ப்பட்டது.
மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை
அதனை அடுத்து சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |