எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை இழப்பீட்டு தொகை வழங்கப்படுமென ராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
மீனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் திங்கட்கிழமை வைப்புச் செய்யப்படும்.இதற்காக ரூபா 420 மில்லியன் செலவிடப்படவுள்ளது.
இழப்பீட்டை பெற தகுதியானவர்களை மீன்வள திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் மற்றும் மீன்பிடி சங்கங்களின் அதிகாரிகள் உறுதிப்படுத்தவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Compensation for #fishermen effected by #XPressPearl will be deposited to their bank accounts from Monday. Rs 420 million will be utilized from the interim claim received. Beneficiaries will be verified by Officials of Fisheries, Divisional Secretariats and Fishing Associations. pic.twitter.com/qBaOclVQFZ
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 11, 2021