விமான நிலைய வளாகத்துக்குள் மான் வேட்டை! விமானப்படை வீரர்கள் ஐவர் அதிரடி கைது
மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த ஐந்து விமானப்படை வீரர்கள் உட்பட ஏழு பேரை மத்தள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விமான நிலைய வளாகத்திற்குள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்புச் சோதனையின்போது சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, கைது நடவடிக்கையுடன், விமானப்படைக்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டியையும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றத்தளப் புலனாய்வு (SOCO) விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அத்தோடு, மத்தள காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |