உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பாதுகாப்பு: காவல்துறை உத்தியோகத்தர் மதுபானம் அருந்திய நிலையில் ரகளை
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது அருந்தி, அந்தக் கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் குருந்துவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றிய ஒரு அதிகாரி ஆவார்.
காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்
சம்பந்தப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அந்தக் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் கடமைக் காலப்பகுதியில், அதாவது ஓகஸ்ட் 19 ஆம் திகதி, கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மது அருந்தி கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறை விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தம் நேற்று முன்தினம் (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு உதவி காவல் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூஷன் சூரிய பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |