வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் உட்பட ஐவர் கட்டுநாயக்காவில் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Kegalle
Arrest
By Jaso
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் உட்பட ஐவர் கைது செய்யபட்டுள்ளனர்.
7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்