இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் இன்று (21) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையிலேயே இப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் பரந்து இருக்கின்ற இயற்கை வளங்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஐந்து ஒப்பந்தங்கள்
சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளை உள்ளடக்கியதாகவே இந்த ஒப்பந்தங்கள் நகர்வதையும் அவதானிக்க முடிகின்றது. அவையாவன
1. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம்
2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
3. சூரிய சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதி மற்றும் IPL மற்றும் lanka pay ஆகியவற்றுக்கு இடையேயான வலையமைப்பு ஒப்பந்தம்
4. UPI விண்ணப்ப ஏற்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
5. கால்நடை வளர்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
