இரண்டாக உடைந்து தீப்பிடித்த விமானம் - 29 இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு இராணுவ வீரர்கள் பயணித்த விபத்துக்குள்ளானதில் 29 இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு இராணுவ வீரர்கள் இராணுவ விமானத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது விமானம் ஜோலோ தீவில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்தது. ஆனால், தரையிறங்கும் முயற்சியின்போது, ஓடுபாதையை தவறவிட்டதால் விமானம் சிறிது தூரத்திற்கு சென்று தரையில் மோதியது.
மோதிய வேகத்தில் விமானம் உடைந்து தீப்பிடித்தது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதப்போகிறது என்பதை அறிந்த சில வீரர்கள், அவசரகால வாசல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,