அதிரடியாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! வெளியான காரணம்
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
தெஹிவளை காவல் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை உதவி பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி 3 ஆண்டுகள் சேவை பணியாற்றியவர் என்றும், மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தொடங்கியுள்ளதாகக் காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட உதவி பரிசோதகருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரி, அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.

இதன்படி, அவர் மீதான மேலதிக விசாரணைகளை தெஹிவளை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி