மகிந்த இறப்பதற்கு முன் நாமலை ஜனாதிபதியாக்குவோம்: ரோஹித எம்.பி சூளுரை
அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 'ஜன சடன' பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன்றிணைக்க தலைமை தாங்கிய தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதையாக, அவரது மரணத்திற்கு முன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அது என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்த இலக்கை அடைவதற்காக முழு மக்களும் ஒருமித்து ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மகிந்தவுக்காக நாம் ஒரு கடமையை செய்ய வேண்டும்
அங்கு ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தவை வருமாறு,

“நான் கேட்பது ஒரே ஒரு கோரிக்கைதான், அதைச் செய்ய நீங்கள் தயாரா? நீங்கள், ரஜரட்ட மக்கள் தயாரா? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கவேண்டும்
இந்த நாட்டை ஒன்றிணைத்த தலைவர், நாட்டையே கட்டியெழுப்பிய தலைவர், அந்த தலைவருக்காக நாம் ஒரு கடமையைச் செய்ய வேண்டும். பிறந்த அனைவரும் இறப்பார்கள்.

ஆனால், மகிந்த ராஜபக்சவின் கண்களுக்குத் தெரியும் வகையில், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற நமக்கு ஒரு கடமை உள்ளது. அது மட்டுமே நீங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு செய்யும் மரியாதையாக மாறும்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 12 மணி நேரம் முன்