ஈழத்தமிழர்களுக்கு சாதகமான களம் ஜெனீவா!
ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற சர்வதேச களமான ஜெனீவாவில் எங்களுடைய அபிலாஷைகளை எங்களுடைய கவலைகளை அங்கு சொல்லக்கூடியதற்கான ஒரு சூழல் இருக்கின்றது.
அதனை எங்களுடைய ஆட்கள் எவ்வளவு தூரம் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதில் சில விமர்சனங்கள் இருக்கும். எங்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச களத்தினை நாங்கள் உண்மையில உச்ச வகையில பயன்படுத்த வேண்டும்.
ஜெனீவா கூட்டத்தொடர் நடக்கின்ற போது சர்வதேச கவனம் முழுவதும் ஜெனிவாவில் குவிந்திருக்கும். அந்த நேரத்தில நாங்கள் ஒரு கருத்துக்களை முன் வைக்கின்ற போது போராட்டங்களை நடத்துகின்ற போது அது சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கான சூழல் வலுவாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கும்.
அடுத்தது இங்கே இருந்து எங்களுடைய பிரதிநிதிகள் ஜெனிவாவிற்கு சென்று கூட்டங்களை நடாத்தி இந்த கருத்துக்களை சொல்லுகின்ற போது சர்வதேச அரசின் பிரநிதிகள், மனித உரிமை அமைப்புகளுடைய பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் ஆகியோருக்கு எங்களுடைய கவலைகளை சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 5 மணி நேரம் முன்