22ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் வெடிக்கவுள்ள ஆர்ப்பாட்டம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம். தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம்.
பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 5 மணி நேரம் முன்