ஹோமாகமயில் தொழிற்சாலையொன்றில் வெடி விபத்து:மூவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Western Province
By Sindu
ஹோமகம, மீப்பே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை (30) ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூன்று ஊழியர்களும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தின் விளைவாக அருகிலுள்ள ஒரு வீடும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தொட்டிக்குள் எரிபொருள்
ஒரு எரிபொருள் நிலையத்தில் ஏலத்தில் வாங்கப்பட்ட தொட்டிக்குள் இருந்த மீதமுள்ள எரிபொருளை முதலில் அகற்றாமல், எரிவாயுவால் இயங்கும் வெட்டும் கருவியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் அதை வெட்டி மாற்றியமைக்க முயன்றபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாதுக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்