விபத்துக்குள்ளான இத்தாலிய இராணுவ ஹெலிகொப்டர் : நால்வர் உயிரிழப்பு!11 பேர் வைத்தியசாலையில்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியான இத்தாலிய இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நேற்று (29) விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 11 பேர் காயமடைந்ததாகவும் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களில் இத்தாலிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தன்னார்வலர்களும் அடங்குவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
15 பேர் இருந்துள்ளனர்
விபத்து நடந்த நேரத்தில் குறித்த ஹெலிகொப்டரில் 15 பேர் இருந்துள்ளனர். மேலும் காயமடைந்த 11 பேரும் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் யாருடைய நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, பிர்கோ மாவட்டத்தில் உள்ள கோரிச்சே கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
டேட்டன் அமைதி ஒப்பந்தத்தின் செயலாக்கத்தைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியப் படையால் வழிநடத்தப்படும் 'ஒபரேஷன் அல்தியா' என்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஹெலிகொப்டர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |